ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் - பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு

ஜவஹர்லாலின் பிறந்தநாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் - பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு
Published on: 

புதுடெல்லி,

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கடந்த 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில்(தற்போது பிரயாக்ராஜ்) மோதிலால் நேரு-ஸ்வருப் ராணி தம்பதியின் மகனாகப் பிறந்தார். ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு, மொத்தம் 16 ஆண்டுகள் 286 நாட்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.

பிறந்தநாள்

அவரது தொலைநோக்குப் பார்வை, சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டது. ஜவஹர்லாலின் பிறந்தநாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று நேருவின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது நினைவைப் போற்றி, மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி பதிவு

அந்த வகையில் பிரதமர் மோடி, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X