ஜெயலலிதாவின் தனி பாதுகாவலரான வீர பெருமாள் விசாரணை ஆணையத்தில் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி பாதுகாவலரான வீர பெருமாள் ஆஜரானார். #JayaDeathProbe #InquiryCommission
ஜெயலலிதாவின் தனி பாதுகாவலரான வீர பெருமாள் விசாரணை ஆணையத்தில் ஆஜர்
Published on

சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

இவர்கள் அளித்த வாக்குமுலம் அனைத்தும் விசாரணை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பில் அவரது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் தனி பாதுகாவலரான வீர பெருமாள் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று இன்று காலை 10.15 மணிக்கு வீரபெருமாள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது நீங்கள் செய்த பணிகள் என்ன? எத்தனை நாட்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றீர்கள்? எவ்வளவு நேரம் அங்கு இருந்தீர்கள்? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அவர் சொன்ன பதில்கள் அனைத்தும் வாக்கு மூலமாக பதிவு செய்தனர். சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் இன்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜர் ஆனார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com