

சென்னை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 18 ம் தேதி டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுக்க உள்ளார்.
இந்த சந்திப்பு அதிமுக - பா.ஜனதா கட்சிகளிடையே கூட்டணியை உறுதி செய்வதுடன், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யவும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சென்னையில், கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியை உறுதி செய்தனர். இதனிடையே கூட்டணியின் பெரிய கட்சி அதிமுக. அவர்கள்தான் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி நேற்று முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.