ஜெயலலிதாவின் மகள் என கோரும் பெங்களூர் அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை- தமிழக அரசு

ஜெயலலிதாவின் மகள் என கோரும் பெங்களூர் அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை என தமிழக அரசின் தலைமை வக்கீல் வாதிட்டார். #Jayalalithaa #Amrutha
ஜெயலலிதாவின் மகள் என கோரும் பெங்களூர் அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை- தமிழக அரசு
Published on

சென்னை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ஜெயலலிதாவின் உடலை வைஷ்ணவ அய்யங்கார் பிரமாண சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்யவில்லை. அதனால், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து சம்பிரதாயபடி அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் ஏற்கனவே பதில் மனுவை தாக்கல் செய்து விட்டனர். அதேபோல, இந்த வழக்கிற்கு தமிழக தலைமை செயலாளர் சார்பில் பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், பதில் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதா எந்த ஒரு ஆதாரங்களையும் தாக்கல் செய்யாததால், மரபணு சோதனை நடத்த தேவையில்லை. பெங்களூரில் அம்ருதாவை ஜெயலலிதா பார்க்கச் சென்றார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் அந்த பதில் மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி இன்று விசாரணைக்கு வந்தது அப்போது ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் பெங்களூருவை சேர்ந்த அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

பெங்களூரை சேர்ந்த அம்ருதா ஜெயலலிதா மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. அம்ருதா பிறந்ததாக கூறப்படும் 1980 ஆம் ஆண்டில் ஜெயலலிதா கலந்து கொள்ளும் வீடியோ தாக்கல் செய்யப்பட்டது. என தமிழக அரசின் தலைமை வக்கீல் வாதிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com