ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா ஆஜர்

ஜெயலலிதா மரணம் பற்றிய நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் முன்பு, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.#KrishnaPriya
ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா ஆஜர்
Published on

சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

தி.மு.க சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், ஜெயலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அரசு டாக்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரும் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று சென்னை சேப்பாக்கம் கலச மகாலில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜரானார்.

#KrishnaPriya | #JayaDeathCase | #Arumugasamy | #Jayalalithaa | #KrishnapriyaJkp | #Tamillatestnews

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com