ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராகமாட்டார்!

ஜெயலலிதா மரணம் பற்றிய நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் முன்பு,சசிகலா ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.#Sasikala #Jayalalithaa
ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராகமாட்டார்!
Published on

சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

தி.மு.க சார்பில் மருத்துவர் சரவணன், ஜெயலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அரசு டாக்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரும் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று சென்னை சேப்பாக்கம் கலச மகாலில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜரானார்.

விசாரணை ஆணையம் சார்பில் ஆஜராக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விரைவில் சசிகலா விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது . இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராவார் என்றும் சசிகலா ஆஜராக மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. வரும் 8ம் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

#RajaSenthoorPandian | #Jayalalithaa | #Sasikala | #JayaDeathCase | #Latesttamilnews

X

Daily Thanthi
www.dailythanthi.com