

சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்படுகிறது. இதனை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் பங்கேற்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழாவில் பங்கேற்கும் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.