ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரி பாக்கி; ஜெ. தீபா மனு தள்ளுபடி

ஜெ.தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரி பாக்கி; ஜெ. தீபா மனு தள்ளுபடி
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியேரை அறிவித்து சென்னை ஐகேர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரேடு இருந்தபேது, அவர் ரூ.36 கேடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.

அவர் இறந்த பின்னர், இந்த தெகையை செலுத்தும்படி அவரது சட்டப்படியாக வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நேட்டீஸ் அனுப்பியது. அதில், ரூ.36 கேடியை செலுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த நேட்டீசை எதிர்த்து சென்னை ஐகேர்ட்டில் தீபா வழக்கு தெடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகேர்ட்டு, நேட்டீசுக்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக சென்னை ஐகேர்ட்டு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பேது, ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள ரூ.36 கேடியை கேட்டு தீபாவுக்கு நேட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்பேது, அந்த நேட்டீசை திருமப் பெறப்பட்டு விட்டது. அந்த தெகையை ரூ.13 கேடியாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நேட்டீஸை மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கெண்ட நீதிபதி, ரூ.36 கேடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நேட்டீஸை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தெடர்ப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.13 கேடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நேட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கேர உரிமை உள்ளது என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com