ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்...!

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்...!
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 188 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த பணியாளர்களுக்கு கடந்த மாத்திற்கான சம்பளமும், நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து போராட்டம் நடத்தினர். இவர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அறிந்த நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

துப்புரவு பணியாளர்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com