ஜே.டி. மதனின் சாதனையை பாராட்டும் வகையில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

வருங்காலங்களிலும் வெற்றிகளை பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
ஜே.டி. மதனின் சாதனையை பாராட்டும் வகையில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
Published on: 

சென்னை,

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் இவ்வெற்றி அமைந்துள்ளது.

வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்கள் வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com