சென்னையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சென்னையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது
Published on

சென்னை,

இந்தியாவில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டும். இது, ஜே.இ.இ. முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.

இதில், முதன்மை தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதல்கட்ட முதன்மை தேர்வு இன்று தொடங்கி ஜனவரி 30-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதன்படி, 22, 23, 24 மற்றும் 28 ஆகிய நாட்களிலும் தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வெழுத 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) கடந்த 18-ந்தேதி இரவு என்.டி.ஏ. வெளியிட்டது. மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற தளத்தில் சென்று அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வை எழுதுவோர் தங்கள் அட்மிட் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் புகைப்பட அடையாள சான்றுகளை எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com