அழகும், ஆபத்தும் நிறைந்த ஜெல்லி மீன்கள்

ராமநாதபுரம் கடல் பகுதியில் அழகும், ஆபத்தும் நிறைந்த ஜெல்லி மீன்கள் அதிகரித்து வருகிறது.
அழகும், ஆபத்தும் நிறைந்த ஜெல்லி மீன்கள்
Published on

ஆர்.எஸ்.மங்கலம், 

ஜெல்லி மீனுக்கு சொறி மீன் என்ற பெயரும் உண்டு. சொறிமீன் என்பது குழியுடலிகள் இனத்தைச் சேர்ந்த கடலில் வாழும் ஒரு உயிரினம் ஆகும். கடல் மீன்களிலேயே அழகானதும் ஆர்ப்பரிக்ககூடியதும் ஜெல்லி மீன் ஆகும். ஜெல்லி மீன்களின் உடலில் காணப்படும் தூரிகை போன்ற அமைப்பு உடலில் ஏதேனும் பகுதியில் பட்டால் உடனடியாக அந்த பகுதியில் ஒரு விதமான வலி ஏற்பட்டு அரிப்பு ஏற்பட தொடங்கி விடும். அதிலும் கடல் சாட்டை வகையைச் சேர்ந்த சொறி மீன் மனிதர்களை கடித்தால் மனிதர்களுக்கு மூச்சடைப்பை ஏற்படுத்துவதுடன், இதயத்தையும் செயலிழக்கச் செய்து ஒரு கட்டத்தில் மரணத்தை விடுவிக்கக் கூடியதாகவும் ஆபத்தான மீனாகவும் உள்ளன. மனிதர்களை கொல்லும் அளவுக்கு வலிமை உள்ளதாகவும் இந்த ஜெல்லி மீன்கள் இருக்கின்றன. கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நீந்தும் போது பார்ப்பதற்கு இந்த ஜெல்லி மீன் அழகாக தெரிந்தாலும் மிகவும் ஒரு ஆபத்தான மீன் என்று சொல்லலாம். உலகம் முழுவதும் உள்ள கடல் பகுதியில் 2ஆயிரம் வகையான ஜெல்லி மீன்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரியமான், ஆற்றங்கரை, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம், பாம்பன் மாவட்டம் முழுவதும் உள்ள கரையோரத்தில் உள்ள கடல் பகுதிகளில் ஜெல்லி மீன்கள் அதிகம் காணப்படுகிறது. இதனால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஜெல்லி மீன்களின் இனப்பெருக்க அதிகரிப்பு காரணமாக மீனவர்களின் வலையில் மீன்கள் குறைவாகவே கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜெல்லி மீன்களை இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மீனவர்களின் கோரிக்கையாகும். அழகும், ஆபத்தும் நிறைந்த இந்த ஜெல்லி மீன்களை கண்டால் திமிங்கலம், ராட்சத சுறா மீன்கள் உள்ளிட்ட மீன்கள் கூட கடலில் நீந்தும் போது பயந்து ஒதுங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com