மேலும் ஒரு வழக்கில் ‘ஜெம்’ வீரமணி கைது; 6-வது வழக்கும் பாய்ந்தது

3-வது வழக்கிலும், அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
‘ஜெம்’ வீரமணி கைது
Published on: 

சென்னை,

தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 6-வது வழக்கும் புதிதாக பாய்ந் துள்ளது.

வீரமணி வழக்கு

சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட புகாரில், தொழிலதிபர் 'ஜெம் கிரானைட்' வீரமணி மீது ஏற்கனவே 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 4 வழக்கு கள், போக்சோ வழக்காகும். அதில் 2 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கு, மதுரை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்காகும்.

அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று, அவர் மீது 6-வதாக புதிய வழக்கு ஒன்றை, சிறப்பு புலனாய்வு போலீசார் பதிவு செய் துள்ளனர். 3-வது வழக்கிலும், அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அதிரடி சோதனை

நேற்று திடீரென்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், சிறப்பு புலனாய்வு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர். சோதனை விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இதுவரை இந்த வழக்கில், வீரமணியால் பாதிக்கப்பட்ட 10 சிறுமிகள் அடை யாளம் காணப்பட்டு, அவர்களின் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வீரமணியின் வீட்டில் வேலை பார்த்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம் ஹன், உதவியாளர்கள் கணேசன், பாபு, டிரைவர்கள் லாசர், பார்த்திபன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com