

சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கேக் வெட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மனித நேயத்தைக் காப்பதற்காக இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தார் என்று கூறினார்.
மேலும் இயேசு மற்றவர்களுக்காக வாழ்ந்தார், மற்றவர்களுக்காக துன்பப்பட்டார் என்றும் தம்மை சிலுவையில் அறைந்தவர்களிடம் கூட அன்பு செலுத்தியதோடு, அவர்களுக்காக பாவமன்னிப்பு தேடினார் என்றும் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் மட்டுமில்லாமல், அனைவருக்கும் அன்பு, மன்னிப்பு, இறக்கம் என்ற செய்தியை அளித்தவர் இயேசு கிறிஸ்து என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.