தொண்டியில் திருட்டுபோன 7 பவுன் நகை மீட்பு

தொண்டியில் திருட்டுபோன 7 பவுன் நகை மீட்கப்பட்டது.
தொண்டியில் திருட்டுபோன 7 பவுன் நகை மீட்பு
Published on: 

தொண்டி, 

தொண்டி ஓடாவி தெருவில் வசித்து வருபவர் ரசூல் மைதீன். இவர் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவருடைய மனைவி மார்பாகனி என்பவரிடம் இருந்து 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டதாக தொண்டி போலீசில் ரசூல் மைதீன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ரசூல் மைதீன் வீட்டின் முன் பக்க கதவில் பால் பாக்கெட்டுக்காக கட்டி வைத்துள்ள துணிப்பையில் திருடுபோன நகைகள் அனைத்தும் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் திருடு போன நகைகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com