மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறிப்பு
Published on

கோவை பீளமேடு, நேரு நகர் டெக்ஸ் பார்க் ரோட்டை சேர்ந்தவர் பாலசுந்தரம்.இவருடைய மனைவி கமலம் (வயது 77).இவர் காலையில் டெக்ஸ் பார்க் ரோட்டில்தனது மகன், மருமகளுடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

நடைபயிற்சியை முடித்துவிட்டு திரும்பி வரும்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன்தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து மூதாட்டி கமலம் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com