பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் பாம்பன் நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 48). இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கவிதாவின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து நகையை காப்பாற்றுவதற்காக கவிதா போராடினார். இருப்பினும் 1 பவுன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com