பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

மானாமதுரை,

மானாமதுரையை அடுத்த அரசன் ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி மல்லிகா (வயது 28). சம்பவத்தன்று மல்லிகா தன்னுடைய அண்ணி கலாதேவியை சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக மொபட்டில் அழைத்து சென்றார்.

அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். கீழ வாணியங்குடி அருகே செல்லும் பொழுது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மல்லிகா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து மல்லிகா சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com