பர்கூர் அருகே மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பர்கூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பர்கூர் அருகே மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

பர்கூர்

பர்கூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மூதாட்டியிடம் நகை பறிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிவபுரத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மனைவி வத்சலா தேவி (வயது 70). இவர்களின் மகன், மகள்கள் சென்னை, பெங்களூருவில் வசித்து வருகிறார்கள். சுந்தரபாண்டியன் இறந்து விட்டதால் வத்சலா தேவி வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வத்சலா தேவியை மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டார்.

போலீசில் புகார்

மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து வத்சலாதேவி பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com