திருக்கோவிலூர் கோவிலில் மூதாட்டியிடம் நகை அபேஸ்

திருக்கோவிலூர் கோவிலில் மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்தவர் குறித்து போலீசா விசாத்து வருகின்றனா.
திருக்கோவிலூர் கோவிலில் மூதாட்டியிடம் நகை அபேஸ்
Published on

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தேவி அகரம் கிராமத்தை சேர்ந்த ஏகாம்பரம் மனைவி அலமேலு (வயது 72) என்பவரிடம் 5 பவுன் நகையை மர்மநபர்கள் அபேஸ் செய்து சென்றுவிட்டனர். இது குறித்து அவர் திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com