

சென்னை,
ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,506க்கு இன்று விற்பனையாகிறது. இதேபோன்று தங்கம் பவுனுக்கு ரூ.152 குறைந்து ரூ.36,048க்கு விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38,928க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பவுன் ஒன்றுக்கு ரூ.36,120க்கு விற்பனையான தங்கம் நேற்று முன்தினம் ரூ.36,200 ஆக அதிகரித்தது. நேற்றும் இதே விலையே தொடர்ந்தது.
வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.73.90க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,900 ஆக உள்ளது.