சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 குறைவு

கடந்த 10 நாட்களில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 குறைவு
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று மேலும் தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. அதேபோல கிராமுக்கு ரூ.190 குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com