சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

ஒரு கிராம் வெள்ளி ரூ.79.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 உயர்ந்து ரூ.45,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.79.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com