நகைக்கடையில் கொள்ளை முயற்சி: லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் - ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது

கேரளாவில் நகைக்கடை லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க முடியாமல் போனதால் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.
நகைக்கடையில் கொள்ளை முயற்சி: லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் - ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது
Published on

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் கைப்பமங்கலம் பகுதியில் செயல்படும் நகைக்கடையை இன்று காலை அதன் உரிமையாளர் வழக்கம்பேல் திறக்க வந்தார். அப்பேது, கடையில் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. கடையின் பின்பக்க சுவரை துளைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர்.

எனினும், லாக்கர் உடையாததால் நகைகளை கொள்ளையடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடைக்குள் இருந்த 50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com