நகை கொள்ளை வழக்கு ; நிஷாந்தை கடைக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை

ஒருநாள் காவலில் எடுத்துள்ள போலீசார் நிஷாந்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிஷாந்த்
Published on: 

மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் ரோட் டில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ந்தேதி சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போனது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக பழங்காநத்தத்தை சேர்ந்த யூடியூபர் நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், நிஷாந்தின் காதலியான திருப்பாலை பகுதியை சேர்ந்த யூடியூபர் மீனாட்சி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ நகைகளை மீட்டனர். தற்போது அந்த 3 பேரும் மதுரை மத் திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்தநிலையில் நிஷாந்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் சிலருக்கு தொடர்பு

அந்த மனு நேற்று மதுரை மாவட்ட முதலாவது விரைவு மாஜிஸ்திரேட்டு கோர்ட் டில் நீதிபதி ராஜபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் நிஷாந்தை அழைத்து வந்து போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, நிஷாந்தை ஒருநாள் (அதாவது நேற்று மாலையில் இருந்து இன்று மாலை வரை மட்டும்) போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்படுகிறது. அதன்பின் ஆஜர்ப டுத்த வேண்டும். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது. விசாரணையின்போது தேவைப்பட்டால் தனது வக்கீலை சந்திக்க நிஷாந்தை அனுமதிக்கலாம் என்ற நிபந்தனைகள் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வீட்டிலும் விசாரணை

ஒருநாள் காவலில் எடுத்துள்ள போலீசார் நிஷந்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையடித்த நகைக்கடைக்கு அழைத்து வந்த போலீசார், கொள்ளையடித்தது எப்படி? என கேட்டு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்த் வீட்டிற்கும் அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொள்ளைக்கு நிஷாந்த் 3 இருசக்கர வாகனங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. நிஷாந்திடம் நடத்தப்படும் விசாரணை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒருநாள் காவல் முடிந்த பிறகு நிஷாந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

X