

சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன
மொத்த வியாபாரம் செய்யும் நகைக்கடையில் பூட்டை உடைத்து தங்கம், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.