திண்டுக்கல் அருகே கார் டிரைவர் வீட்டில் நகை திருட்டு

திண்டுக்கல் அருகே கார் டிரைவர் வீட்டில் நகை திருடுபோனது.
திண்டுக்கல் அருகே கார் டிரைவர் வீட்டில் நகை திருட்டு
Published on

திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர், கோவையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராம்கமலா (வயது 41) என்ற மனைவியும், விக்ரமன் (20) என்ற மகனும் உள்ளனர். சதீஸ்குமார் 2 வாரங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவது வழக்கம். இதனால் ராம்கமலாவும், அவரது மகனும் போக்குவரத்து நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இடைவிடாது மழை பெய்ததால் ராம்கமலா வீட்டை பூட்டிவிட்டு, மகன் விக்ரமனுடன், அதே பகுதியில் உள்ள தனது சகோதரி லட்சுமிவிமலா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ராம்கமலாவின் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகையை திருடி சென்றனர்.

இதற்கிடையே இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்த ராம்கமலா, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, 6 பவுன் நகை திருடு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com