பழனியில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை திருட்டு

பழனியில் நிதி நிறுவன உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
பழனியில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை திருட்டு
Published on

பழனி:

பழனி குபேரபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராம். நிதி நிறுவன உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். இதனால் அவரது வீடு பூட்டிக்கிடந்தது.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், பொன்ராம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். உள்ளே பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகையை திருடி சென்றனர்.

இதற்கிடையே நேற்று காலை வீட்டிற்கு வந்த பொன்ராம், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com