சிறுமியிடம் நகை திருட்டு

உவரியில் சிறுமியிடம் நகை திருடு போனது.
சிறுமியிடம் நகை திருட்டு
Published on

திசையன்விளை:

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் கனகப்பபுரம் அய்யா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் சுப்பிரமணி. இவர் குடும்பத்துடன் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வந்து இருந்தார். இரவு அங்குள்ள விநாயகர் கோவில் அருகே குடும்பத்துடன் படுத்து தூங்கிகொண்டிருந்தார். அப்போது அவருடைய மகள் பிரித்திகா (வயது 15) கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர் திருடிச் சென்று விட்டதாக உவரி போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com