சென்னையில் ரூ.29 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

தேர்தல் தேதி அறிவித்த பின்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
சென்னையில் ரூ.29 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்
Published on

தி,நகர்,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி, நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பின்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை தி.நகரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 28 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால், பறிமுதல் செய்து நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com