108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளருக்கு வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளருக்கு வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளருக்கு வேலை வாய்ப்பு முகாம்
Published on

108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

108 ஆம்புலன்சில் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நாமக்கல்லில், திருச்சி சாலையில் உள்ள பழைய கோர்ட்டு வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பி.எஸ்.சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி. அல்லது லைப் சையின்ஸ் பட்டதாரி, பி.எஸ்.சி. ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முக உடற்கூரியியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான தேர்வு, மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சியும், ஆஸ்பத்திரி மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com