

சென்னை,
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக முதல்வர் உத்தரவின்படி மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வின் முலம் வெளிப்படையாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காலி பணியிடங்களின் விபரம் கலந்தாய்விற்கு முன்னதாகவே துறை இணைய தளத்தில் முழுமையாக வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.