கூட்டுக் குடிநீர் திட்டம்: ஜூலை 1-ல் அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கூட்டு குடீநீர் திட்டம் தொடர்பாக ஜூலை 1-ல் அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என். நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டுக் குடிநீர் திட்டம்: ஜூலை 1-ல் அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆலோசித்து வருகிறது.

இத்திட்டத்திற்காக ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசனதார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே இப்பிரச்சினை குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து, சுமுகத்தீர்வு காண்பதற்காக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் தலைமையில் ஜூலை 1-ந் தேதி தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com