ஜல் ஜீவன் திட்ட பணிகளை இணை செயலாளர் ஆய்வு

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஜல் ஜீவன் திட்ட பணிகளை இணை செயலாளர் ஆய்வு செய்தார்.
ஜல் ஜீவன் திட்ட பணிகளை இணை செயலாளர் ஆய்வு
Published on

ஊட்டி,

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மக்களுக்கு சென்று உள்ளதா என மத்திய அரசின் இணை செயலாளர் அம்ரிஷ் ஆணைகட்டி, உல்லத்தி, எப்பநாடு கிராமங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களுக்கு ஜல் ஜீவன் திட்டம் குடிநீர் வசதி கிடைத்து இருக்கிறதா, இந்த குடிநீர் போதுமானதாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொது சுகாதார திட்டத்தில் கிராமங்களில் தனிநபர் கழிப்பிடம், பொது கழிப்பிடம் முறையாக உள்ளதா, அதற்கு தேவையான தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது ஊட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நந்தகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com