ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம்

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம்
Published on

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஸ்ரீதேவி காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சிக்கு தேவையான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். அதற்கு அனைத்து கோரிக்கைகளையும் நிதி நிலைக்கு ஏற்றவாறு நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்களின் பெயர்பலகையை, ஒன்றியக் குழு தலைவர் திறந்து வைத்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், அலுவலக மேலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com