துணை ஜனாதிபதிக்கு 'ஜோசப் விஜய்' புத்தகம்: அமைச்சர் சம்பத்குமார் வழங்கி வரவேற்பு

துணை ஜனாதிபதிக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
துணை ஜனாதிபதிக்கு 'ஜோசப் விஜய்' புத்தகம்: அமைச்சர் சம்பத்குமார் வழங்கி வரவேற்பு
Published on

கோவை,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தமிழகம் வந்துள்ளார். இன்று கோவை வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, விமான நிலையத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அவரைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது, 'ஜோசப் விஜய் உன் பேரே வரலாறு' என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com