பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடாபாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை
Published on

சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியா பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சென்னை வந்துள்ளார்.

நேற்று இரவு சென்னை வந்த அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் வரவேற்றனர்.

இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் முன்னிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில், பாஜக மாநில மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மாநில கவர்னரும், பாஜக மாநில தலைவரும் தமிழச்சி சவுந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடாந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிவாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடாபாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஜே .பி நட்டாவின் வருகையை முன்னிட்டு பாஜகவின் முக்கிய நிவாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com