இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை

இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் பணிபுரியும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் எம்.செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு துறையில், இளநிலை உதவியாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், டாஸ்மாக் கடையில் வேலை செய்பவர்கள், இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு செப்டம்பர் 14-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்வித் தகுதியை ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இளநிலை உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பை கல்வித்தகுதியாக நிர்ணயிக்க டாஸ்மாக் பொதுமேலாளருக்கு உத்தரவிட வேண்டும். இந்த பணிக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்ய எனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சத்ருஹன புஜாரி விசாரித்தார். மனுதாரர் சார்பில், வக்கீல் லெசி சரவணன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com