தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடாமல் அரசு மவுனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் அரசு மவுனம் காப்பது சந்தேகத்தை பலத்த ஏற்படுத்துகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தி.மு.க அரசு மௌனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த விசாரணை அறிக்கையில், காவல்துறை அதிகாரிகள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும், அவர்களை தி.மு.க அரசு காப்பாற்ற முயல்வதாகவும் வெளிவரும் செய்திகள் உண்மையா? காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதுடன், அதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க அரசு இதனை செய்யுமா? அல்லது வழக்கம் போல இப்பிரச்னையிலும் இரட்டை வேடம் போடப் போகிறார்களா?" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com