சிறுவன் புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் - கமல்ஹாசன்

சிறுவன் புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சிறுவன் புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் - கமல்ஹாசன்
Published on

சென்னை,

புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்து வெளியேறிய ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் குடிசை வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுவன் புகழேந்தி (வயது11) தலையில் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்த நிலையில் சிறுவனை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சிறுவன் புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திலிருந்து வெளியேறிய தோட்டா சிறுவன் புகழேந்தியின் இன்னுயிரைப் பறித்துவிட்டது.பிள்ளையை துள்ளத்துடிக்க பறிகொடுத்த பெற்றோரின் இழப்பு அளவீடற்றது. அவர்களுக்கு என் ஆறுதல்கள். புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com