கபடி போட்டி

வேதாரண்யத்தில் கபடி போட்டி
கபடி போட்டி
Published on

வேதாரண்யம்:

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் கபடி போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான புகழேந்தி தலைமை தாங்கினார். நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிம்பு வரவேற்றார். நாகை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கமல் முன்னிலை வகித்தார். கபடி போட்டியினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் உதயம் முருகையன், சதாசிவம், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கோவி அன்பழகன், நகர்மன்ற துணைத்தலைவர் மங்களநாயகி ராமச்சந்திரன், மாவட்ட வக்கீல் அணி அன்பரசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்மணி, சுப்பிரமணியன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. சார்பு அணியினர் கலந்து கொண்டனர். முடிவில் விளையாட்டு அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அனீஸ்பாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com