கபடி போட்டி

வாசுதேவநல்லூர் அருகே கபடி போட்டி நடந்தது.
கபடி போட்டி
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே அருளாட்சி கிராமத்தில் ஆசைத்தம்பி கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய மின்னொளி கபடி போட்டி நடந்தது. பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் அ.ஆனந்தன் போட்டிகளை தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார். போட்டியில் தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து 80 அணிகள் கலந்து கொண்டன.

போட்டியில் சுந்தரராஜபுரம் அணி முதல் பரிசையும், ஆசைத்தம்பி அணி இரண்டாம் பரிசையும், தூத்துக்குடி ஆரோக்கியராஜ் அணி 3-வது பரிசையும் தட்டிச் சென்றது. 60 கிலோ எடைப்பிரிவு போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசை ஆசைத்தம்பி கபடி குழுவும், செம்பருத்தி முகவூர் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றது.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆசிரியர் ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சங்கர நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com