கச்சத்தீவு விவகாரம்: தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் - ப.சிதம்பரம்

உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடும் பா ஜ க தலைவர்களுக்கு தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்: தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் - ப.சிதம்பரம்
Published on

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியள்ளது. அன்று பிரதமராக இருந்தவர் மோடி .அன்று வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர்.

அந்த 27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பா ஜ க தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்? கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பா ஜ க தலைவர்களுக்கு இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறதுஉங்கள் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள். என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com