

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா-தூத்துக்குடி இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-17615) வருகிற ஜூன் 15-ந் தேதி முதல் திருச்சிக்கு மாலை 4.55 மணிக்கு பதிலாக மதியம் 2 மணிக்கு வரும். அதேபோல, மதுரைக்கு 4.20, விருதுநகருக்கு 5.03, தூத்துக்குடிக்கு இரவு 10.30 மணிக்கு பதிலாக இரவு 7.15 மணிக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.