

தர்மபுரி மாவட்ட அளவிலான கபடி போட்டி தர்மபுரி டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 24 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஜூனியர் பிரிவு போட்டியில் கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த பள்ளி மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, உடற்கல்வி ஆசிரியை கல்பனா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.