நெல்லையில் 21-ந்தேதி 'கடலம்மா மாநாடு' - சீமான் அறிவிப்பு


நெல்லையில் 21-ந்தேதி கடலம்மா மாநாடு - சீமான் அறிவிப்பு
x

மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு நடத்தியுள்ள நிலையில், சீமான் தற்போது கடல் மாநாடு நடத்த உள்ளார்.

நெல்லை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு நடத்தியுள்ள நிலையில், தற்போது கடல் மாநாடு நடத்த உள்ளார். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

“நெல்லை மாவட்டம் கூத்தன்குழி முதன்மை சாலையில் வரும் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும். ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும். இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. "

1 More update

Next Story