கடையநல்லூர் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

கடையநல்லூர் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடையநல்லூர் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் கடந்த ஜனவரி மாதம் தலைமைச் செயலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அன்று முதல் புதிதாக நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர்கள் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தனர். மேலும் கடையநல்லூர் நகராட்சிக்கு நிரந்தரமாக புதிய ஆணையாளரை நியமிக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து புளியங்குடி நகராட்சியில் பணியாற்றிய சுகந்திக்கு பதவி உயர்வு அளித்து கடையநல்லூர் முதல் நிலை நகராட்சி ஆணையராக தமிழக அரசு நியமனம் செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை கடையநல்லூர் நகராட்சி ஆணையராக சுகந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு நகராட்சி பொறியாளர் ஜீவா, இளநிலை பொறியாளர் முரளி, மேலாளர் சண்முகவேலு மற்றும் நகராட்சி ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com