கடையநல்லூர் யூனியன் கூட்டம்

கடையநல்லூர் யூனியன் கூட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர் யூனியன் கூட்டம்
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள்பால்ராஜ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் கந்தசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மணிகண்டன், பகவதியப்பன் உள்பட 11 கவுன்சிலர்கள கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கிய போது கவுன்சிலர் அருணாசல பாண்டியன், கவுன்சிலர்களுக்கு முறையான அஜண்டா வழங்கப்படவில்லை. அதிகாரிகள் கவுன்சிலர்களை மதிப்பதில்லை என குற்றம் சாட்டி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து அவருடன் மேலும் சில கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com