காதர் மொய்தீன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நீண்டகாலம் நலத்துடன் திகழ விழைகிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காதர் மொகிதினின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் - நம் அனைவரின் மரியாதைக்குரிய 'தகைசால் தமிழர்' பேராசிரியர் காதர் மொய்தீன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பத்திரிகையாளர், பேராசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலநிலைகளிலும் சமூகத்துக்குப் பங்களித்து, மதநல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் தாங்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ விழைகிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






