அழகு நாச்சியம்மன் கோவில் தேரோட்டம்

அழகு நாச்சியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
அழகு நாச்சியம்மன் கோவில் தேரோட்டம்
Published on

அன்னவாசல் அருகே வெள்ளனூரில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில், பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அழகுநாச்சியம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங்காய், பூ, பழம் வைத்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன்னதாக காலையில் வெள்ளனூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com